
மதுரை ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
மதுரையில் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நட வடிக்கை எடுத்து வரு கின்றனர்.
இந்த நிலையில் மதுரை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் மாரி முத்து, ராமச்சந்திரன் ஆகியோர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் எடை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
