Police Recruitment

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கறிக்கடைக்காரர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கறிக்கடைக்காரர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தபாடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (24). இவர் ஈரோடு பள்ளிபாளையம் கறிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவி குழந்தைகளுடன் வந்த முருகன் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உடனடியாக சென்று அவரிடம் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து முருகன் கூறும்போது எனது தந்தை சேட்டுக்கு இரு மகன்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தைக்கு தனக்கு சொந்தமான 103 சென்ட் நிலத்தில் 30 சென்ட் நிலத்தை எனது பெயருக்கு எழுதி வைத்தார். இந்த நிலையில் எனக்கு கடனாகி விட்டதால் எனக்கு உரிய சொத்தை தருமாறு கேட்டதற்கு தர மறுத்து விட்டார். எனக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு கேட்டு தொல்லை செய்வதால் எனது தந்தை எனக்கு தரவேண்டிய சொத்தை பிரித்து தருமாறு பென்னாகரம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் அங்கு உள்ள போலீசார் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண சொன்னார்கள். எனவே எனக்கு வேறு வழி எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வாறு கூறினார். இதையடுத்து முருகன் மற்றும் அவரது மனைவியை தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.