
தர்மபுரி மாவட்டம் பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச்சேர்ந்த 12வயது சிறுமியை, அவரது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியை பெற்ற தந்தையே பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால், தம்பியை கொலை செய்து விடுவதாகவும் இதனால் பயந்து போன சிறுமி, சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில், ஏற்பட்டது.
சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாய் கேட்ட போது, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய், அரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
