
புரிதலுக்கான போதிய அறிவு முதிர்ச்சி இல்லா குழந்தைகளின் குற்றச் செயல்கள்
ஏழு வயதுக்கு மேற்பட்ட ஆனால் பனிரெண்டு வயதுக்குட்பட்டவர் குற்றம் செய்ய இயலாதவர் என்று கூறப்படுவது அவர் போதிய அறிவு வளர்ச்சி பெறாதவர் என்று குறிப்பிடப்படுவதாகும் அவரது நிலைமையை எடுத்து கூறி அவரது அறியா தன்மையை நிரூபிக்க வேண்டும் குற்றமாக கருதப்படும் செயலை செய்யும் போது அவர் போதிய அளவு மனவளர்ச்சி பெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் அறிவுள்ள ஒருவரின் அறியாத்தன்மையைப் பற்றி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 83 கூறுகிறது
இந்திய தண்டனைச் சட்டம் – ஐபிசி பிரிவு 83 – தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது., தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது.
12 வயதுடைய ஒரு குழந்தை ரூ. 100/-பெறுமானமுள்ள ஒரு பொருளை திருடி அதை ரூ.10 க்கு விற்று விட்டால் அதனை வாங்கி கொண்டவர் மட்டுமே குற்றவாளி ஆவார். ஏனெனில் 12 வயதுக்குட்பட்ட அக்குழந்தைக்கு சட்டப்படி தான் செய்வது குற்றம் என்பது தெரியாது ஆனால் வாங்கி கொண்ட குற்றவாளிக்கு இச்செயல் குற்றம் என்று தெரிந்தும் அவர் அதில் ஈடுபட்டதால் அவரே குற்றவாளியாக கருதப்படுவார் குழந்தை செய்தது திருட்டாகவே இருப்பினும் அது திருடப்பட்ட பொருள் என்று தெரிந்தே வாங்கி கொண்ட நபரே தண்டனைக்குரியவர் 12 வயதுக்குட்பட்ட குழந்தை ஒரு கடையின் பூட்டை உடைத்து திறந்து அங்குள்ள பருப்பு முதலான பொருட்களை திருடி விட்டது எனில் அக்குழந்தை போதிய அறிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் திருட்டு குற்றம் புரிந்ததாக கருதப்படும்.
