Police Recruitment

மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது

மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் தோபாராவை சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (வயது 32). இவர் தஞ்சாவூரில் ஜி.எஸ்.டி. அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டம் குருவாடாவை சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜி ஜுன்ஸ் ஜினுவைச் சேர்ந்தவர் ராமச்சந்திர தேசுசாய் மகன் சுபேஷின் (29). இவர் முத்துப்பேட்டையில் கஸ்டம்ஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். ஹரியானா மாநிலம் குரு கிராம் மாவட்டம் நூர்கரத் துவை சேர்ந்தவர் யாராம் ஆனந்த் மகன் தினேஷ்குமார் (24). இவர் மதுரையில் சி.பி.ஐ. கிரைம் பிராஞ்ச் உதவி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் 4 பேரும் மதுரை அய்யர் பங்களா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கிளப்பிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திரும்பும்போது அவர்களுக்கான பில் தொகையை கிளப் ஊழியர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அவர்கள் ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த கிளப்பின் மேனேஜர், உச்சபரம்பு மேடு அய்யர் பங்களா ஹரிஹரன் தெருவை சேர்ந்த ஆனந்த் பாபு (38) என்பவர் அங்கு சென்றுள்ளார்.

அவர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 அதிகாரிகளும் கிளப் மேலாளர் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக பேசி பாட்டில்களை உடைத்து அடித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிளப் மேனேஜர் ஆனந்த் பாபு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது.

Leave a Reply

Your email address will not be published.