

26-06-2023.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வுகளை பற்றிய கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் கலந்துக்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது….
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில்
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை பென்னாகரம் வட்டார ( DSP ) துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி . மகாலட்சுமி அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில், ( INSPECTOR) காவல் ஆய்வாளர் திரு. முத்தமிழ்செல்வன் , (S I ) உதவி காவல் ஆய்வாளர் திரு. ஜெயச்சந்திரன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சக்திவேல் மற்றும் சிலம்பரசன் உடன் இருந்தனர்
பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்கள் பதகைகளை ஏந்தியபடி பள்ளி வளாகத்தில் இருந்து மாங்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து மாங்கரை கிராமம் வரை பேரணியாக சென்று போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்கள்.. மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது…
போலீஸ் இ செய்திகளுக்காக….
பென்னாகரம் செய்தியாளர்:
டாக்டர். மு.ரஞ்சித் குமார்
செய்தியாளர்கள்: சங்கீதா நாகராஜ் மற்றும் முருகேசன்.
