
தர்மபுரியில் கள்ளச்சாராய வேட்டையில் 59 பேர் கைது
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் மற்றும் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாகவும், ஓட்டல் மற்றும் பெட்டிக்கடைகளில் குடிக்க அனுமதித்ததாகவும் அரூர், பொரப்பூர், கம்பை நல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பெண்கள் உள்பட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 448 மதுபாட்டில், 100 லிட்டர் ஊறல், 8 லிட்டர் சாராயம் மற்றும் 8 கிலோ கஞ்சா ஆகியவற்றுடன், 3 டூவீலர்களையும் போலீசார் கைப்பற்றினர்
