Police Recruitment

IPC 304 A. ஜாக்கிரதை

IPC 304 A. ஜாக்கிரதை

நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே ஆபாத்தான வளைவு, விபத்து நடக்கும் பகுதி, என்றெல்லாம் எழுதி வைத்து வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதை பார்கிறோம் நகர எல்லைக்குட்பட்ட சாலைகளில் சில இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் வெள்ளை வட்டத்திற்குள் 304 A என்று எழுதி வைத்திருப்பதை பலரும் பார்த்திருக்கலாம் அந்த இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கியவர் மாண்டு விட்டார் நீங்கள் கவனமாக வாகனம் ஓட்டுங்கள் என்பதுதான் அதன் பொருள்.

இந்த எச்சரிக்கை இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 304 A என்பதைதான் குறிக்கிறது அதாவது ஒருவர் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் அடங்காத தன்னுடைய அஜாக்கிரதை மற்றும் கண்மூடித்தனமான ஒரு செயலால் மற்றவருடைய மரணத்திற்கு காரணம் ஆனாரானால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அப்பிரிவு கூறுகிறது

Leave a Reply

Your email address will not be published.