


பாலக்கோடு பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்க்கு தடை
மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சியும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தலைமை வகித்தார்.
இதில் மாசு காட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நித்திய லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.
தமிழக முழுவதும் 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து உத்தவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் மூலம் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்ப்பட்டு வருகிறது.
அனைவரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்த கேட்டுக் கொண்டார்,
அதன் தொடர்ந்து பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் பேரூராட்சி சார்பில் தானியங்கி இயந்திர மூலம் 2ஐந்து ரூபாய் காயின் அல்லது 10 ரூபாய் நோட்டு செலுத்தி ஒரு மஞ்சள்பை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை பாலக்கோடு உழவர் சந்தையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
முன்னதாக பேரூராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா, உழவர் சந்தை வேளாண்மை உதவி அலுவலர் செல்வம், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் அலுவலக ஊழியர்கள், தூய்மை காவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
