ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனை
தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தல் காரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்த அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் காமினி, உத்தரவின்பேரில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மேற்பார்வையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் நேற்று சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், தலைமையில் தருமபுரி காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர்கள் தொப்பூர் டோல்பிளாசா மற்றும் மாவட்ட எல்லைகளிலும், நகரின் மையப்பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் வாகன ச்சோதனை நடத்தினர்.
அப்போது ரெயில் நிலையங்களில் சோதனை செய்தும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டது.
இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் தெரிவித்தனர்.