பாலக்கோடு பைபாஸ் சாலையில் கர்நாடகாவிலிருந்து மோட்டார் சைக்கிளிலில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் கைது .
மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலையில் பாலக்கோடு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இராயக்கோட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சாக்கு பை மூட்டையுடன் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்,
சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
கர்நாடக மாநில மதுபாட்டில்கள் 60 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரனையில் பெண்ணாகரம் அருகே மோட்டுப் பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (வயது.33) என்பதும் கர்நாடகாவிலிருந்து மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்ததது.
உடனடியாக மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்னர்.