
கட்டிடமேஸ்திரி தற்கொலை
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் உச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது35). கட்டிடமேஸ்திரி. இவருக்கு கடன் பிரச்சினையால் தவித்து வந்தார். இதனால் அவரது குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதன்காரணமாக மனவேதனையில் இருந்த தேவேந்திரன் சம்பவத்தன்று விஷமருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி கொண்டு வந்தனர். அப்போது அவர் வரும்வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
