Police Recruitment

பாலக்கோட்டில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்.
கணவர் கண்ணீருடன் காவல் நிலையத்தில் மனைவியை மீட்டு தர கோரி புகார் .

பாலக்கோட்டில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்.
கணவர் கண்ணீருடன் காவல் நிலையத்தில் மனைவியை மீட்டு தர கோரி புகார் .

தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுயை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பசுபதி (வயது.37),
இவருடைய மனைவி செவ்வந்தி (வயது.30).
இவர்களுக்கு திருமணமாகி 10 வயதில் கவியரசு என்ற மகனும், 7 வயதில் காவியா என்ற மகளும், 5 வயதில் நவியா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கனவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்க்கு திரும்பி வந்தவர் வீட்டில் மனைவி குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மாமியார் வீடு, உறவினர்கள், நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் மனைவியும் 3 குழந்தைகளும் கிடைக்காததால் மனைவி குழந்தைகளை கண்டுபிடித்து தர கோரி பசுபதி பாலக்கோடு காவல் நிலையத்தில் கண்ணீருடன் இன்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பாலக்கோடு காவல் நிலைய தொடர்பு எண் 9498101076, 9842933267
தகவல் தர இன்ஸ்பெக்டர் சுரேஷ் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.