22-06-2023
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட மாங்கரை கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா…
மாங்கரை மற்றும் அதன் சுற்றுப்புற ஏழு கிராமங்களான மோட்டுப்பட்டி, ஆணைக்கல்லனூர்,
நூலவள்ளி, கொட்டாயூர் ,பில்லப்பட்டி,
மற்றும் குள்ளாத்திரம்பட்டி, ஆகிய ஏழு கிராமங்களும் இணைந்து கடந்த 10 நாட்களாக திருவிழாவை சிறப்பாக நடத்தப்பட்டது.(22/06/2023 )
மாங்கரையில் ஏழு கிராமங்கள் சார்பாக எருதாட்டம் நடைபெற்றது.
இந்த எருதாட்ட விழாவிற்க்கு பென்னாகரம் DSP திருமதி. மகாலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்
சுமார் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். காவலர்கள் உதவியுடன் அமைதியாகவும் , பாதுகாப்பாகவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காவலர்களுக்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக
அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சமூக சேவகர்கள் திரு.மணிவாசகம் மற்றும் இரஞ்சித் அவர்கள் இனிப்புகளை வழங்கி ஊர் பொதுமக்கள் சார்பாக தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்கள்.
பென்னாகரம் செய்தியாளர் …..
டாக்டர்.மு. ரஞ்சித்குமார்
செய்தியாளர்கள்
சங்கீதா நாகராஜ் மற்றும்
முருகேசன்….