
பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றவர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுரேஷ் அவர்களுக்கு தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது பாலக்கோடு பஸ் நிலையம் அருகே மைதீன்நகரை சேர்ந்த சுபான் என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில் குயில், ரோசா, நல்லநேரம், தங்கம் ஆகிய தடை செய்யப்பட்ட 530 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்து சுபானை கைது செய்தனர்.
