கொரோனா நோய் தொற்று, மற்றும் குற்றத் தடுப்பில் மக்களின் பங்கு, பற்றி பொது மக்களிடம் கலந்தாய்வு செய்த காவல் ஆய்வாளர்
மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதோடு கொரோனா நோய் தடுப்பு பற்றி மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வு செய்தும் இலவச முக கவசங்கள் வழங்கியும் வரும் இவர் கூடுதலாக நேற்று செப்டம்பர் மாதம் 1 ம் தேதி கட்ராபாளையத்தில் உள்ள செப்பல் சேம்பர் ஆப் அசோசியசன் கட்டிடத்தில் பொது மக்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார், இந்த கூட்டத்திற்கு ஆய்வாளர் , மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சின்னச்சாமி, முருகன், பாலசுப்ரமணி ஆகியோரும் வந்திருந்தனர் இதில் விடுதிகளின் உரிமையாளர்கள் சங்கம், செப்பல் கடை உரிமையாளர்கள் சங்கம், எலக்ட்ரானிக் கடை உரிமையாளர்கள் சங்கம் பழைய இரும்பு மற்றும் மரக் கடை உரிமையாளர்கள் சங்கம், பெருமாள் தெப்பக் குளம் சிறு வியாபாரிகள் சங்கம் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இவர்களிடம் ஆய்வாளர் அவர்கள் பேசும் போது தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உரையாற்றினார். மேலும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் பொது மக்களின் பங்கு என வரும் போது அவரவர் நிறுவனங்களில் CCTv கேமராக்கள் பொருத்தியிருந்தாலும் மேலும் கடைக்கு வெளியிலும், கடைகள் இருக்கும் தெருக்கள், வீதிகளையும் அது கவர் செய்வதாக இருப்பது நல்லது, இதன் மூலம், குற்றம் புரியும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு பிடித்து விட முடியும், எனக் கூறினார், இது போன்று பொது மக்களிடம் கலந்தாய்வு கூட்டங்களை காவல் துறையினர் நடத்துவதன் மூலம் பொது மக்கள் காவல் துறை நல்லுறவு ஏற்படும், மேலும் ஆய்வாளர், திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் பணி மேலும் சிறக்க போலீஸ் இ நியூஸ் வாழ்த்துகிறது.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி