Police Recruitment

பென்னாகரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி .

பென்னாகரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி .

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை சார்பாக அம்பேத்கார் சிலை அருகில் இருந்து தனியார் பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி அவர்கள் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். பென்னாகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன்முன்னிலை வகித்தார். இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் மதுவை ஒழிப்போம் சமுதாயத்தை காப்போம், குடியை ஒழிப்போம் குடும்பத்தை காப்போம், போதை பொருளை தொடாதே பாதை தவறி கெடாதே. குடியை விடு படிக்க விடு, போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தி சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி தற்காலிக பேருந்து நிலையம், முள்ளுவாடி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, வட்டாட்சியர் அலுவலகம், காவேரி ரோடு வழியாக சென்று பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவியர்களின் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாணவ மாணவியர்களின் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, வட்டாட்சியர் சௌகத்அலி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஊக்கப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்
சுமார் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர். இதில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன், உதவி காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.