


தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.
தர்மபுரி நான்கு ரோட்டில் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் மற்றும் கஞ்சா விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ் தலைமையில் பேரணி தொடங்கி வைத்தார்.
பேரணிக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதை பொருளுக்கு எதிராக பள்ளி மாணவ மாணவிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதன் பின் போதை பொருள் எதிர்ப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், காவல்துறையினர், ஓம் காட் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின பேரணியில் கலந்து கொண்டனர்.
தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து மதுராபாய் மண்டபம் வரையிலும், எஸ். வி ரோட்டில் இருந்து மதுராபாய் மண்டபம் வரையிலும் பேரணி நடைபெற்றது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை மதுராபாய் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை
கண்காணிப்பாளர் செந்தில் குமார், B1 நகர
காவல் ஆய்வாளர் ரங்கசாமி, போக்குவரத்து
உதவி ஆய்வாளர்கள் சரவணன், சின்னசாமி மற்றும் காவல் துறையினர் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பொது மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
