Police Recruitment

போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

காரைக்குடி, தேவகோட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

காரைக்குடியில் உட்கோட்ட போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கினார். வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக சென்று மீண்டும் கண்ணதாசன் மணி மண்ட பம் வந்தடைந்தது.

காரைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விடுதலை எனும் பெயரில் குழு ஒன்றை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது. கல்லூரி பொருளாளர் முகமது மீரா, சாக்கோட்டை சப் -இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் தாளாளர் மற்றும் மற்றும் முதல்வர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். புதுவயல், சாக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து மேட்டுக்கடை பஸ் நிலையம் வரை பேரணி நடந்தது.

தேவகோட்டையில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரசாரம்.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆலோசனை யின் பேரில் தேவ கோட்டையில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அழகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, அன்சாரி உசேன், போலீசார், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். யூனியன் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்நிலையம் வழியாக தியாகிகள் பூங்கா வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Leave a Reply

Your email address will not be published.