Police Recruitment

தர்மபுரி குடும்ப தகராறில் தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு

தர்மபுரி குடும்ப தகராறில் தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அம்பேத். இவருடைய மகள் அஜிதா (வயது29). இவர் எம்.எஸ்.சி, பி.எட் முடித்து ள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-வருடங்களுக்கு முன்பு கடத்தூர் பகுதியை சேர்ந்த சபரிநாயகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சபரிநாயகன் டீக்கடை யில் கூலி வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழ க்கம் இருந்து வந்துள்ளது.

கடந்த 25-ம் தேதி சபரி நாயகன் குடிபோதையில் இருந்ததால் கணவன்-மனைவி இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அஜிதா மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் அஜிதாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜிதா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 6- வருடங்கள் ஆகியுள்ள தால் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.