
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சாவு
பாளை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் அருண் பிரகாஷ்(வயது 20). இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் பழுதாகி நின்ற காரை சரி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் பிரகாஷ் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.
உடனே ஆலங்குளம் போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
