ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற காவலருக்கு காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு
ஹரியானாவில் நடைபெற்ற 72 வது தேசிய அளவிலான காவலர்களுக்கு இடையிலான ஆணழகன் போட்டியில் (BODY BUILDING) தங்கம் வென்ற காவலருக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு
மதுரை மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த PC 4141 சிவா என்பவர் ஹரியானாவில் நடைபெற்ற 72 ஆவது தேசிய அளவிலான காவலர்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு 60 கிலோ எடை பிரிவினருக்கான ஆணழகன் போட்டியில்(BODY BUILDING) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்ததற்காக தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.