Police Recruitment

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றத்தில் உட்கார வசதி செய்ய வேண்டுமா?

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றத்தில் உட்கார வசதி செய்ய வேண்டுமா?

குற்ற வழக்குககளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் நீதிமன்ற விசாரணையின் பொழுது ஏன் உட்கார வைக்கப்படுவதில்லை ? என்று ஒரு கேள்வியை எழுப்பியதால் அது இப்பொழுது ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது பெஞ்சுகள் காலியாக இருந்தாலும் அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் உட்கார அனுமதிப்பதில்லை என்பது புதிராக உள்ளது என்று பழைய தலைமை நீதிபதி சஞ்சய் கிருஷன் கால் மற்றும் நீதிபதி T.S. சிவஞானம் பெஞ்ச் கூறியுள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒரு புது வித அனுபவமாக உள்ளது. என்பதே இவர்களுடைய கருத்தாகும் இதில் சரியான முடிவு எடுத்து எல்லா கிரிமினல் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் அவர்கள் உட்கார வசதி செய்து தருமாறு பதிவாளர் ஜெனரலை அவர்களை கேட்டுக்கொண்டார்கள் கர்ப்பிணி பெண்களையும் நிற்க்க வைத்தே விசாரணை செய்வது நாகரிகமான செயல் அல்ல அதுபோல வயதானவர்களும் உடல் நலமில்லாதவர்களும் அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு நீதிமன்றத்தில் உட்கார வசதி செய்து தர வேண்டும்.அவர்கள் விசாரணைக்குத்தான் வந்துள்ளார்கள் அவர்களின் உடலை வருத்துவது சரியல்ல என்று சொன்ன நீதிபதிகள் அவதார்சிங் எதிர் மத்திய பிரதேச (1982) தீர்ப்பை மேற்கோள் காட்டி உள்ளார்கள். அதில் விசாரணை நிரம்ப நாட்கள் நடக்கலாம் அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நின்று கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஏன் என்று தெரியவில்லை இதனால் நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் எல்லாம் இந்த விசயத்தில் கிரிமினல் சட்டம் பிரிவு 477(1) படி வேண்டிய வசதிகளை செய்ய வேண்டிய கட்டளைகளை இடுதல் வேண்டும் அடையாளம் காட்டும் சமயம் தவிர.மற்ற நேரங்களில் அவர்க உட்கார வசதிகள் செய்து தரப்பட வேண்டும் அவர்கள் கூப்பிய கரங்களுடன் செறுப்பு இல்லாமல் தரையில் உட்கார அனுமதிக்க கூடாது. அவர்கள் மரியாதையாக உட்கார ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்

மேற்கண்ட தீர்ப்பு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்குரைஞர் ஜெய்கனேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கிற்கே வழங்கப்பட்டது நீதிமன்றத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை அவர்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள் உதாரணமாக ஒரு வழக்கு சம்பந்தமாக மாநில தகவல் ஆணையத்திற்கு சென்ற விண்ணப்பதாரர் சிவ இளங்கோ என்பவருக்கு உட்கார அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவருக்கு இதற்க்காக சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதை சுட்டி காட்டியே இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டது

மாநில தலைமை ஆணையாளர் தாம் இதற்கு முன் அரசியல் முதன்மை செயலாளராக இருந்ததால் யாரும் தம் முன் உட்காரக்கூடாது என கண்டித்ததாவும் சுட்டி காட்டி மேலும் கூறியது நீதிமன்றத்திற்கு வருபவர்கள் ஆடு மாடு அல்லர்.

Leave a Reply

Your email address will not be published.