மாரண்டஅள்ளி பொன்முடி தியேட்டரில் சினிமா பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட இருவர் கைது .
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது. 34) இவர் நேற்றிரவு மாரண்டஅள்ளியில் உள்ள பொன்முடி சினிமா தியேட்டரில் ஜிகர்தண்டா திரைப்படம் பார்த்து கொண்டிருந்தார்,
இவருக்கு முன் சீட்டில் சிக்கமாண்டஅள்ளியை சேர்ந்த பிரகாஷ் (வயது.27) செல்வம் (வயது.22) ஆகியோர் அமர்ந்து சினிமா பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது முருகனின் கால் பிரகாஷ் மீது பட்டடுள்ளது,
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது,
இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், செல்வம் இருவரும் சேர்ந்து சினிமா முடிந்து வெளியே வந்த முருகனை உருட்டு கட்டையால் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.