
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய ஆணும், இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
பெண்ணின் காதல் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி எச்சரித்தனர்.
அதன்பின் இளம்பெண் தனது வீட்டிற்கு செல்லாமல் காப்பகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் காப்பகத்தில் இருந்த போது காதலன் தனது வீட்டில் யாரும் இல்லை என அழைத்தார்.
இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

