
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் கைது
தருமபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில், அமர்ந்திருந்த 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
பிடிப்பட்ட 17 வயது சிறுவன் நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. பின்னர் அதியமான்கோட்டை போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து, அவனிடமிருந்த ரூ.500 மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
