தடை செய்யப்பட்ட பான் மசாலா போதைப்பொருள சுமார் 450 கிலோ பறிமுதல்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி ஏ.டி.எஸ்.பி.மணிமாறன் அவர்களின் தலமையில் மதுவிலக்கு காவல் பிரிவினர் பள்ளிபாளையம் ஆர். எஸ். ரோடு குட்டை முக்கு பகுதியில் ரோந்து செல்லும் போது நெல்லை மாரிமுத்து ஸ்டோர் என்ற கடையில் சோதனை செய்து சுமார் 450 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற போதைப் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். வியாபாரி வனராஜ் வயது 40.என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
