Police Recruitment

தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி

மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகே இன்று தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக சென்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளா கத்தில் நிறைவு பெற்றது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக தமிழ்நாடு விழாவை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார், போலீஸ் துணை துணை கமிஷனர் அரவிந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, துணை மேயர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.