

பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா, இருளர் சாதிச்சான்று, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் அரசின் திட்டங்களை பற்றிய போதிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லாததாலும், ஏராளமான அரசு திட்டங்கள் இருந்தும் பயனடையாமல் நாம் இருக்கின்றோம்.
அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அரசின் திட்டங்கள் குறித்து எந்த விதமான சந்தேகங்கள் இருந்தாலும் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாராயனசாமி, தாசில்தார் ராஜா, வருவாய் ஆய்வாளர் குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
