

மாரண்டஅள்ளி நேரு நகரில் மனைவி மாயம்,
வாலிபர் மீது கனவர் போலீசில் புகார் .
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நேரு நகரை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது .42) இவர் பூச்செடி வியபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி கலைவாணி (வயது.36)
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடம் ஆகிறது.
17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சமீப காலமாக கலைவாணி அடிக்கடி நீண்ட நேரம் போனில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி சின்ன சவுளுப்பட்டியில் உள்ள தனது அம்மா வீட்டிற்க்கு செல்வதாக கூறி சென்றார்.
மஞ்சுநாதன் மனைவிக்கு போன் செய்த போது மனைவியின் போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததால் மாமியாருக்கு போன் செய்து விசாரித்தார்.
அப்போது கலைவாணி இங்கு வரவில்லை என மாமியார் தெரிவித்ததால்,
மனைவியை உறவிணர்கள் நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சின்ன சவுளுப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது.42) என்பவர் தனது மனைவியை கடத்தி சென்று மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகப்பட்ட மஞ்சுநாத் சுரேஷ் மீது மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
