
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி- புகைப்பட கண்காட்சி
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜா,பழனிநாடார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கலெக்டர், பொதுமக்கள் மாணவ- மாணவிகள் சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மேம்பாலம் வழியாக மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணியில் சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி, துணை தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
