இளம்பெண்-வாலிபர் மாயம்
சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சுனிதா. சம்பவத்தன்று அவரது தாத்தா வீட்டில் சென்றார். அங்கிருந்த அவர் திடீரென மாயமானார்.
எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் தாத்தா பெரியசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கட்டிட வேலைக்கு செல்வதாக தந்தையிடம் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செல்வம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.