மகேந்திரமங்கலத்தில் குடும்ப பிரச்சனையால் அதிகளவு மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு.
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகுணசேகரன், இவரது மனைவி க திவ்யா (வயது. 24)
இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந் நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது,
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கனவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் விரக்தியடைந்த திவ்யா வீட்டிலிருந்த சுகர் மற்றும் பி.பி மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயக்க நிலையில் இருந்த திவ்யாவை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவீர சிகிச்சையில் இருந்தவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.