
தென்காசியில் டிரைவரிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 53). இவர் அங்குள்ள பட்டாசு கடையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். தென்காசியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 18-ந் தேதி வந்தபோது தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் வைத்து அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அது குறித்து தென்காசி போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் தென்காசி பழைய பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த முகமது அலி(36) மற்றும் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுடலைகுமார் (36) ஆகியோர் என்பதும், இவர்கள் டிரைவரிடம் செல்போன் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
