
காவாப்பட்டி கிராமத்தில் சூதாடிய 2 பேர் கைது. இருவர் தலைமறைவு
2 பைக்குகள் மற்றும் 1600 ரூபாய் பணம் பறிமுதல் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி கிராமத்தில் இரட்டை புளியமரத்தடியில் சூதாடிய கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் புதுர்மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான மாரியப்பன் (வயது 32) சீனிவாசன் (வயது. 30), என்பது தெரிய வந்தது, இருவரையும் கைது செய்து இவர்களிடமிருந்து 1600 ரூபாய் பணம், 2 டி.வி.எஸ். Xட பைக்குகள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தப்பியோடிய தொட்டம்பட்டியை சேர்ந்த மணி. புதுர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
