
அகரம் பிரிவு சாலையில் சொகுசு கார் மோதி தனியார் பஸ் கண்டக்டர் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் பூபாலன் (வயது .36) இவர் இன்று காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலையில்,
சாலையை கடக்க முயன்ற போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த சொகுசு கார் இவர் மீது மோதியது,
இதில் பலத்த காயமடைந்த பூபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்,
