Police Recruitment

சாலை பாதுகாப்பு – போதை விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு – போதை விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூரில் மக்கா அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனத்த லைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செய லாளர் சம்சுதீன், அறக்கட்ட ளை பொறுப்பா ளர்கள் ஹீரா, காஜாமைதீன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வார்டு கவுன்சிலர்கள் கண்ணன் என்ற பாலசுப்பிரமணியன், சுபா ராஜேந்திர பிரசாத், பூங்கோதை கருப்பையா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் முடிவு பெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் போதை தடுப்பு விழிப்பு ணர்வு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷேக் மைதீன், யாசின், பைசல் அமீர்கான் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.முடிவில் அறக்க ட்டளை பொறு ப்பாளர் மீராசா இப்ராஹிம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.