மதுரையில் சாலை விபத்துக்களை தடுக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களின் தலைமையில் விபத்து பகுதிகள் ஆய்வு
தமிழ்நாடு சாலை பாதுகாப்பு.. சிறப்பு அதிரடிப்படையின் உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து விதமான சாலைகளிலும் மிகவும் ஆபத்தான, விபத்தை ஏற்படுத்தும் பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும் போக்குவரத்து மேம்பாடுத்துவதற்க்கும் எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பீல்ட் சர்வே டீம் feild servey team FST.. எனும் ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளார்கள்
இந்த ஆய்வு குழுவில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை ஆகியோர்களுடன் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொறியியல் மாணவர்கள் இணைந்து ஆய்வறிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் இதனில் ஒரு பகுதியாக மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திக் அவர்களின் தலைமையில் D1, D2, D3, D4, E1, E2, E3, E4, E5, and Highcourt பகுதிகளுகுட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.