பாலக்கோடு பட்டு பூச்சி அலுவலகம் எதிரே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தண்டு காரண அள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி சாமுவேல் (வயது.40) இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகணபதியுடன் .நேற்று மாலை பாலக்கோட்டிலிருந்து வெள்ளி சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்,
எண்டப்பட்டியை சேர்ந்த சேரன் (வயது.22) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வெள்ளிசந்தையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்,
பாலக்கோடு அருகே பட்டுபூச்சி அலுவலகம் முன்பு 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.