
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து
ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் புலிபாண்டியன் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பால முருகன் (27). இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள இடியாப்பம் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடை முன்பாக நின்று கொண்டிருந்தபோது பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (21) என்ற வாலிபர் அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலமுருகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.
