இந்திய விமானப்படையில் குரூப்-எக்ஸ், குரூப்-ஒய் டிரேடு பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய விமானப்படையில் ஏர்மேன் பதவி குரூப்-எக்ஸ் (தொழில்நுட்பம்) குரூப்-ஒய் (தொழில்நுட்பம் அல்லாத) டிரேடு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குருப்-எக்ஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியி யல் பாடப்பிரிவில் 3 ஆண்டு கள் பட்டயப் பட்டிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குரூப்-ஒய் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1998 ஜனவரி 13-ம் தேதி மற்றும் 2002 ஜனவரி 2-ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதித்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை www.airmenselection.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 2018 ஜனவரி 12. கூடுதல் விவரங்களை www.careerindianairforce.cdac.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.