Police Recruitment

பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த 7 பேர் கைது – 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் .

பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த 7 பேர் கைது – 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு புகார் சென்றது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,
பாலக்கோடு பஸ் நிலையம், முருகன் கோயில் தெரு, எம்.ஜி, ரோடு, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த மேல் தெருவைசேர்ந்த சக்தி (45), திருமல் வாடியை சேர்ந்த ராஜ்குமார் (30), நக்கல் பட்டியை சேர்ந்த விஜயகுமார் (31), அகராகரத் தெருவை சேர்ந்த அருளானந்தம் (27) சுகர்மில் பகுதியை ஞானசேகர் (27) நக்கல் பட்டியை நந்தகுமார் (23) கணபதி (32) ஆகிய 7
நபர்களையும் சுற்றி வளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.