சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை மாவட்ட அனைத்து காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் .
இன்று 5.4 .2021 மாலை
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பூக்கடை வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு மாதவரம் அம்பத்தூர் அண்ணா நகர் தியாகராய நகர் புனித தோமையர் மலை அடையார் மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி மாவட்டங்கள் என அனைத்து காவல் மாவட்ட முக்கிய வாக்கு சாவடிகள்.அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று காவல் ஆளிநர்கள் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு ஆயத்த நடவடிக்கைகளை பற்றி ஆலோசித்து அறிவுரைகள் வழங்கியும் மக்கள் கூடும் இடங்கள். பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று காவல் அதிகாரிகளுடன் தகுந்த ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.