
பாப்பாரப்பட்டி அருகே….மகனின் மண்டையை உடைத்த தந்தை கைது..
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி(54) என்பவரை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ரவி என்பவரது மனைவி பூங்கொடி, இவரது மகனான ராபர்ட் க்ளைவ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்..
ராபர்ட்க்ளைவ் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதால் தங்களுக்கு பல்வேறு வகையிலும் சிரமமாக உள்ளது, தங்களுக்கு சேரவேண்டிய தனது தாத்தா சொத்தினை கொடுத்தால் வீடு கட்டி வாழ்ந்துகொள்வோம், தங்களுக்குண்டான சொத்தினை பாகம் பிரித்து தந்துவிடும்படி தனது தந்தை ரவியிடம் ராபர்ட் க்ளைவ் முறையிட்டு வந்துள்ளார், இது தொடர்பாக நேற்று முன்தினம் மீண்டும் கேட்டபோது, ஆத்திரமடைந்த ரவி தான் பெற்ற மகன் என்று பாராமல் இரும்பு ராடால் ராபர்ட்க்ளைவை தாக்கியதாக கூறப்படுகிறது, காயமடைந்த அவர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னை தாக்கிய தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராபர்ட்க்ளைவ் கொடுத்த புகாரின் பேரில், காய்கறிவியாபாரியான ரவியை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
பெற்ற மகன் என்று பாராமல் மகனின் மண்டையை உடைத்த தந்தை கைது செய்யபட்டிருக்கும் சம்பவம் பாப்பாரப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
