பாலக்கோடு பேருந்து நிலையத்தில் வட மாநில பாணிபூரி தொழிலாளியை மது போதையில் தாக்கும் இளைஞர்கள் – வீடியோ காட்சி வைரல்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு வட மாநில தொழிலாளர் விஜய் (22) என்பவர் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று மாலை மது போதையில் பாணிபூரி கடைக்கு வந்த இளைஞர்கள் 3 பேர் பாணிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது,
இதில் மது போதையில் இருந்த 3 இளைஞர்களும் பாணிபூரி கடையை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி நாசம் செய்தனர்.
இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்