பெரியாம்பட்டி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தன் (வயது .55)
இவர் நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் தர்மபுரி சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்,
தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பேருந்து இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.
அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.