மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம்மன் சிலை முன்பு உரிமையா ளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்ப டுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை கண்காணித்து அவர்களுக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதித்து வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் இல்லாமல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை துணை ஆணையர் குமார் தலைமையில், மாநகர பகுதிகள் முழுவதும் தீவிர வாகன சோதனை இன்று மேற் கொண்டனர். இதில் இரண்டு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை கூறினர்.
மேலும் முறையாக நம்பர் பிளேட் பொருத்தி மீண்டும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலையருகே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.