Police Recruitment

ARRESTED THE ACCUSED WHO CHEATED RS. 16 CRORES BY INDUCED TO INVEST IN SOLID WASTE TO ENERGY PROJECT

ARRESTED THE ACCUSED WHO CHEATED RS. 16 CRORES BY INDUCED TO INVEST IN SOLID WASTE TO ENERGY PROJECT

சென்னையை சேர்ந்த திரு .பாலாஜி கபா M/s Madhav Media Private limited என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு Libra Productions Pvt Ltd என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் சந்திரசேகரன் என்பவர் அறிமுகமாகி நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மேற்படி திட்டம் ஆரம்பிப்பதற்காக போலியான ஆவணங்களை காண்பித்து தன்னை நம்ப வைத்து ரூ
16 கோடி வரை முதலீடு செய்ய வைத்து. Power Project – மை ஆரம்பிக்காமலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாகவும் எனவே நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
புலன் விசாரணையில் M/s Libra production private limited என்ற நிறுவனத்தைச் சேர்ந்த திரு .ரவீந்தர் திட கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து அதனை உண்மை என நம்ப வைத்து திரு .பாலாஜி கபாவிடம் ரூபாய் 16 கோடி வரை பெற்றுக் கொண்டு power project -யை ஆரம்பிக்காமலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியது புலன் விசாரணையில் தெரிய வந்தது.
இவ் வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் இ. கா.ப.அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு EDF-1 காவல் உதவி ஆணையாளர் திரு .ஜான் விக்டர் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ரவீந்திர் ஆ/வ 39, த/பெ சந்திரசேகரன்,,2B, No 18 , Garden Peace Mayberry Apartment,19th Avenue, Ashok Nagar, Chennai -83. என்பவரை 07.09.2023 ம் தேதி கைது செய்து கனம் நடுவர் CCB & CBCID நீதிமன்றம் எழும்பூர் அவர்களிடம் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.