
காதலிக்க மறுத்த பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: தலைமறைவான வாலிபர் மீது போக்சோ வழக்கு
தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தருமபுரியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
பெரியகுரும்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் என்கிற முனியப்பன் (வயது28) என்பவர் மாணவி பள்ளிக்கு வரும்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த மாணவி முனியப்பனை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் முனியப்பனை தேடி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணேசன் என்கிற முனியப்பனை தேடி வருகின்றனர்.
