
மதுரை, தத்தனெரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, செல்லூர் காவல்துறையின் அதிரடி
மதுரை செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தத்தனெரி கண்மாய் கரை கனேசபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஸ் என்ற பாட்ஷா இவன் மீது அடிதடி கொலைமிரட்டல், வழிப்பறி என அனேக வழக்குகள் நிலைவயில் இருக்கும் நிலையில் இவன் சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் வழிப்பறி வழக்கில் செல்லூர் காவல் ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான். இந்த நிலையில் இவன் மீண்டும் வெளியில் வந்தால் அதிகமான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவான் என்பது மிகவும் தெளிவான நிலையில் செல்லூர் காவல் ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் இவன் மீது குண்டர் தடுப்பு சட்டப்படி இவன் மீது வழக்கு பதிவு செய்து மதுரை மநகர காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த்சின்ஹா அவர்களிடம் அனுமதி பெற்று கடந்த 3 ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை மாற்றப்பட்டது.
